சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 7 மாநிலங்களில் காலியாக இருந்த 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலையில் எண்ணப்பட்டது. இதில் தமிழகத்தில் நடந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரானாகட், தக்ஷின், மானிக்தலா ஆகிய 4 தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரினாத், மங்கலுர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரே தொகுதியான அமர்வார் தொகுதியில் பா.ஜ.கவின் கம்லேஷ் பிரதாப் வெற்றி பெற்றார்.
ஆக மொத்தம் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியும், 2 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலைப் போலவே இடைத்தேர்தலிலும் சாதித்துவிட்டதாக நினைத்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் உற்சாகத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வி இருப்பதை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரதீப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் பக்தா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரதீப், மேற்குவங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் வெறும் ஒரு சதவீத வாக்குகளை வாங்கி காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. ஆனால் அவர்கள் இடைத்தேர்தலில் பிற தொகுதிகளில் பெற்ற வெற்றியை எண்ணி கொண்டாடி வருகின்றனர்” எனக்கூறியுள்ளார்.
https://twitter.com/pradeep_gee/status/1812479752915361889“ஒரு சதவீத வாக்கு கூட வாங்க முடியல”… காங்கிரஸை பங்கமாக கலாய்த்த பாஜக பிரதீப்!