Events & Launches Home Life & Styles News Public News

இந்தியாவில் முதல்முறையாக கே ஏ ஜி டைல்ஸ் நிறுவனத்தின் மூன்று நாள் கண்காட்சி சென்னை திருவேற்காடு சிக்னல் அருகில் உள்ள கே ஏ ஜி டைல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

ஒரு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் கே ஏ ஜி டைல்ஸ் நிறுவனத்தால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ப்ளோர் டைல்ஸ், வால் டைல்ஸ்,ஸ்டேர்கேஸ் மற்றும் பார்க்கிங் டைல்ஸ்,எலிவேஷன் மற்றும் ரூஃப் டைல்ஸ்,பாத்ரூம் உள்ளிட்ட பல்வேறு வகையான டைல்ஸ் வகைகள் பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு தங்களிடம் டைல்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 சதவீத தள்ளுபடியுடன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் எனவும் தங்களின் டைல்ஸ் வகைகள் சதுர அடியின் விலை 50 ரூபாய் முதல் தொடங்குவதாகவும், புது வீடோ பழைய வீடோ அல்லது மிகப்பெரிய கட்டுமான பணிகளாக இருந்தாலும்

வாடிக்கையாளர்களின் எண்ணம் சிந்தனை மற்றும் வடிவத்தை மாற்றும் விதமாக இந்த கண்காட்சி அமையும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முரளிதரன் மற்றும் இயக்குனர் பாலாஜி ஆகியோர் தெரிவித்தனர்.

Back To Top