Home Life & Styles Police News Public News Sports

ஃப்ரெஷ்ஒர்க்ஸ் சென்னை முழு மாரத்தான் 2023-பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் நிகழ்வில் வெற்றி வாகை சூடிய வினோத்குமார் சீனிவாசன் & பிரிஜிட் ஜெரண்டு கிமிட்வாய் 20,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பு!

சென்னை, 2023, ஜனவரி , ஞாயிறு :

 

சென்னையில் இன்று நடைபெற்ற 11வது பதிப்பின் ஆண்களுக்கான முழு மாரத்தான் நிகழ்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. வினோத் குமார் சீனிவாசனும், பெண்களுக்கான முழு மாரத்தான் நிகழ்வில் கென்யாவைச் சேர்ந்த பிரிஜிட் ஜெரண்டு கிமித்வாய் என்ற வீராங்கனையும் வெற்றி வாகை சூடினர். ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023 பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் நிகழ்வில் இடம்பெற்ற பல்வேறு வகையினங்களின் கீழ் மொத்தத்தில் 20,000-க்கும் அதிகமான துடிப்பும் ஆர்வமும் கொண்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இன்று காலை நடைபெற்ற மாரத்தான் போட்டியின் வழித்தடம் நெடுகிலும் வெவ்வேறு இடங்களில் ஆர்வமிக்க மக்கள் பெருந்திரளாக கூடியிருந்து இந்நிகழ்வில் பங்கேற்ற 20,000 ஓட்டப்பந்தய வீரர்களையும் உற்சாகப்படுத்தினர்.

 

முழு மாரத்தான் நிகழ்வும் ட்வன்ட்டி மைலர் நிகழ்வும் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து நேப்பியார் பாலத்திலிருந்து ஆரம்பமாயின. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான டாக்டர். ஜெயந்த் முரளி ஐபிஎஸ் (ஓய்வு) இந்நிகழ்வுகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெசன்ட்நகரிலுள்ள ஆல்காட் பள்ளியிலிருந்து தொடங்கிய அரை மாரத்தான் போட்டியை தமிழ்நாடு மாநிலத்தின் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இதே அமைவிடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தய நிகழ்வை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால், ஐபிஎஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

 

பிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023 பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் என்பது உலகின் மிகச்சிறந்த மாரத்தான் நிகழ்வுகளோடு ஒப்பிடக்கூடியவாறு உலகத்தரத்திலான ஒரு விளையாட்டு நிகழ்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாரத்தான் 11வது பதிப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வு ஓட்டப்பந்தய வீரர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தொடர்ந்து பிரபலமாகி வருகிறது. இப்போது தேசிய அளவிலும் மற்றும் உலகளவிலும் தீவிரமான ஓட்டப்பந்தய வீரர்களுக்கு காலண்டரில் தவறவிடக்கூடாத ஒரு மிக முக்கிய நிகழ்வாக சென்னை மாரத்தான் நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. இம்மாரத்தான் நிகழ்வை நடத்துகிற குழுவின் சிறப்பான அமைப்பு ரீதியான திறன்கள், எவ்வித சிக்கல்களும் இல்லாமல் தொடர்ந்து மிகப் பிரமாதமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் நேர்த்தி தொழில்நுட்ப ரீதியிலும், மருத்துவ ரீதியிலும் சிறப்பான உதவி ஆகியவையும் இந்நிகழ்வு அதிகப் பிரபலமடைந்து வருவதற்கான காரணங்களுள் சிலவாகும்.

 

முடிவுகள்

 

வெற்றியாளர்கள்

 

முழு மாரத்தான் – ஆண்கள்

 

1. வினோத் குமார் சீனிவாசன்​- 02:37:28

2. கியான் பாபு​- 02:48:46

3. ஜெகதீசன் முனுசாமி​​- 02:57:39

 

முழு மாரத்தான் – பெண்கள்

1. பிரிஜிட் ஜெரன்ட் கிமிட்வாய்​- 03:31:36

2. சந்தியா சங்கர்​​​- 03:33:57

3. மம்தா ராவத்​​- 03:53:41

 

ஃபெர்பெக்ட் 20 மைலர் – ஆண்கள்

1. ஜோஷ் G​​- 02:04:54

2. வெங்கடேசன் பழனிசாமி​​- 02:05:54

3. சுபம் தீக்ஷித்​​- 02:11:49

 

ஃபெர்பெக்ட் 20 மைலர் – பெண்கள்

1. டிம் டிம் ஷர்மா ​​​- 02:31:25

2. வினயா மாலுசாரி​​​- 02:40:57

3. ரமா ரஞ்சனி​​- 03:03:45

 

அரை மாரத்தான் – ஆண்கள்

1. மோனு குமார் ​​- 01:16:09

2. மல்லிகார்ஜுனா P​​​- 01:18:30

3. அசோகன் சண்முகம்​​- 01:24:47

 

அரை மாரத்தான் – பெண்கள்

1. விர்ஷாலி உத்தேக்கர்​- 01:35:59

2. ஜெகதீஸ்வரி J ​​- 01:45:52

3. தரணிதிவ்யா பழனிசாமி​​- 01:56:22

 

10 கிமீ. – ஆண்கள்​​

1. ஆதேஷ் யாதவ்​​- 00:32:18

2. ரோஹித் ராணா​​- 00:33:23

3. சிவ சஞ்சய்​​- 00:33:26

 

10 கிமீ. – பெண்கள்

1. கஸ்தூரி T​​- 00:48:30

2. தியானா பாஸ்கரன் ​​- 00:48:57

3. பால அபிராமணி ​- 00:54:40

Back To Top