Government News Home Life & Styles News Public News

அடுத்த 4 ஆண்டுகளில் இறால் குஞ்சு பொரிக்கும் தொழிலில் 6 லட்சம் பேர் பணியமர்த்தப்படுவார்கள், தற்போதைய நிலையில் இருந்து உற்பத்தித் திறனை பல மடங்கு அதிகரிக்கும்”: தமிழ்நாடு அகில இந்திய இறால் மீன் வளர்ப்பு சங்கத்தின் – தலைவர் திரு. ஜி. கால்ராஜ்

நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டம் 2005க்கான திருத்தத்தை நிறைவேற்றியது, இந்திய இறால் மீன் வளர்ப்பு தொழிலுக்கு உத்வேகத்தை தந்துள்ளது

 

சென்னை, ஆகஸ்ட் 10, 2023:  மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் 2005 ஆம் ஆண்டுக்கான சிஏஏ சட்டத்தின் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியது. இதனால் முதலீட்டாளர்கள், விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் திருப்தியான மனநிலை கிடைத்துள்ளது. “இந்திய இறால் மீன் வளர்ப்பு சங்கம், மாண்புமிகு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் கோடாபாய் ரூபாலா, மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மாண்புமிகு இணையமைச்சர் திரு. எல். முருகன், மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மாண்புமிகு இணையமைச்சர் டாக்டர். சஞ்சீவ் குமார் பல்யான், ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர். பீடா மஸ்தான் ராவ் என அனைவரும் இணைந்து இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மேலும் இந்த சட்டத்திருத்தத்துக்கு கடற்த்தொழில் அமைச்சு, கரையோர மீன்வளர்ப்பு அதிகார சபை, அரச கடற்த்தொழில் துறை அதிகாரிகள் போன்றோரும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட இத்தருணத்தில் இவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இந்த நடவடிக்கையால் இந்தியாவில் நிலையான கடலோர மீன் வளர்ப்பு ஊக்குவிக்கப்படலாம். PMMSY என்னும் திட்டங்களின் மூலம் மத்திய அரசு நிர்ணயிக்கும் இலக்கை இந்தியா அடைய உதவும்” என்கிறார் தமிழ்நாடு அகில இந்திய இறால் மீன் வளர்ப்பு சங்கத்தின் தலைவர் திரு. ஜி. கால்ராஜ்.

அடுத்த 4 ஆண்டுகளில் இறால் மீன் வளர்ப்பு தொழிலில் 6 இலட்சம் பேர் பணியமர்த்தப்படுவார்கள். இது தற்போதைய எண்ணிக்கை விட உற்பத்தி திறனை பல மடங்கு அதிகரிக்கும். என்கிறார் கால்ராஜ். AISHA தலைவர்,. சிஏஏ சட்டம் 2005 -ன் திருத்தம்படி வரும் 4 முதல் 5 ஆண்டுகளில் தற்போதைய 8.75 லட்சம் டன்னில் இருந்து இறால் குஞ்சு உற்பத்தி திறன் 20 இலட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு தற்போது 2 இலட்சத்தில் இருந்து 6 இலட்சமாக உயரும் என்றும் எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் 85 இறால் மீன் வளர்ப்பு பண்ணை ஆனது 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 35 ஆயிரம் டன் வரை உற்பத்தி செய்கின்றனர். எனினும் துரதிஷ்டவசமாக 7000 ஹெக்டேர் மட்டும் பயன்படுத்தப்பட்டு 35 ஆயிரம் டன் இறால்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏற்றுமதிக்கு உற்பத்தி செய்கிறது. இந்த நிலத்தை முழுமையாக பயன்படுத்தினால் வரும் ஆண்டுகளில் 1 இலட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தற்போதைய அந்நிய செலாவணிய பங்களிப்பானது ரூ 40 ஆயிரம் கோடியிலிருந்து 1 இலட்சம் கோடி வரை பெறலாம் என்றார்.

இந்த 2005 சிஏஏ சட்டம் பொருத்தமான திருத்தங்களை செய்வதற்கான வேண்டுகோளை தொழில்துறையின் பங்குதாரர்கள், கடலோர மீன் வளர்ப்பு ஆணையம், இந்தியாவில் பல்வேறு மாநில மீன்வளத்துறைகள், மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் என அனைவரது ஒருமித்த எதிர்பார்ப்பு என்றே சொல்லலாம். NGT, -யில் மறு ஆய்வு மனு அளித்ததன் மூலம் உரிமம் பெற்ற இறால் மீன் வளர்ப்பு தொழில் செய்பவர்களுக்கு சிஏஏ ஆதரவாக வந்திருந்தாலும் இந்த வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. அதனால் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காண்பது முக்கியமான குறிக்கோளாக இருந்தது. இறால் மீன் வளர்ப்பு ஆனது விவசாய நடவடிக்கையில் இருந்து வேறுபடுத்தும் வகையில் சிஏஏ சட்டத்தை திருத்தம் செய்யாவிட்டால் நிவாரணம் கிடைக்காது என்பதை உணர்ந்தது. இந்த தொழிலை தற்போது PMMSY திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு இந்தியாவின் மீன்வள உற்பத்தியை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டிருப்பதால் தற்போது மத்திய அரசுக்கும் இப்போது ஆதாயம் கிடைக்கப்பட்டுள்ளது என மேலும் கால்ராஜ் கூறினார்

இந்நிகழ்ச்சியில் டாக்டர் பி.இ. சேரன், செயலாளர் – அகில இந்திய இறால் மீன் வளர்ப்பு சங்கம், தமிழ்நாடு. எல்லங்கி ரவி, அகில இந்திய இறால் மீன் வளர்ப்பு சங்க தலைவர். முத்துக்கருப்பன், துணைத்தலைவர், அகில இந்திய இறால் மீன் வளர்ப்பு சங்கம். டாக்டர் ஜோஷி கே. சங்கர், பொதுச்செயலாளர், அகில இந்திய இறால் மீன் வளர்ப்பு சங்கம், மற்றும் ஸ்ரீ கே. மதுசூதன் ரெட்டி, தலைவர், மீன் வளர்ப்பு மற்றும் தொழில் வல்லுநர்ள் சங்கம் ஆகியோர் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

A brief history of the Act and the multiple issues faced by the Industry

Since September 2022, the industry has been in jeopardy after a NGT order was issued asking the licensing authority, Coastal Aquaculture Authority to take action against hatcheries located on the shore, though in fact CRZ Notifications 2005, 2011 and 2019 have listed hatchery as a permitted activity in CRZ within 200 metres from HTL. Shrimp Hatchery being a very sensitive activity in Coastal Aquaculture which requires oceanic quality water, makes it an invariably beach front activity. The CAA Act 2005, however, had not demarcated hatchery as a beach front activity and clubbed with the farm activity that can very well be done beyond coastal regulation zone of 500 metres.

The Act notified both the activities as coastal aquaculture and the benefit of permit specified for hatcheries within 200 metres in CRZ notification had not been mentioned. Some unscrupulous elements in the society interpreted this point in the CAA act in their favour and started threatening the hatcheries to extort money, though the hatcheries are licensed and monitored by the Coastal Aquaculture Authority.

When the hatcheries declined to divulge on such demands, some of the so-called NGOs had filed a petition in the National Green Tribunal, Chennai demanding demolition of hatcheries functioning along the east coast of Tamil Nadu for the past three decades and got an order from NGT purely based on misinterpretation of the Act. Coastal Aquaculture in India provides livelihood to several lakhs of people particularly marginal farmers and landless labourers since its popularisation in the 1990s and has helped India earn more than Rs 40,000 crores in foreign exchange.

Back To Top