Cinema Movies Entertainment Home Life & Styles News Public News

24 மணி நேரம் திரையரங்கில் ஓடிய கே.ஜி.எப் திரைப்படம்!

திருப்பூர்: தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி திருநாளை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்தது. இந்த நேரத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது.

அதனை தொடர்ந்து கே.ஜி.எப் வெளியானது. கே.ஜி.எப் திரைப்படம் திருப்பூரில் புகழ் பெற்ற எம்.ஜி.பி கிரான்ட் திரையரங்கிலும் வெளியானது. கே.ஜி.எப் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் எம்.ஜி.பி கிரான்ட் தியேட்டரில் 24 மணி நேரம் தொடர்ந்து ஓடி இந்த படம் சாதனை படைத்துள்ளது. இதை பற்றி எம்.ஜி.பி கிரான்ட் தியேட்டர் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் கூறுகையில்: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு பிறகு கே.ஜி.எப் திரைப்படம் இந்த திரையரங்கில் 24 மணி நேரம் தொடர்ந்து காட்சியளிக்கப்பட்டது. காலை 4மணி, 7மணி, 10.30மணி, மதியம் 1.45 மணி, மாலை 5 மணி, இரவு 8.15மணி, இரவு 11.30மணி என இடைவிடாது காட்சியளிக்கப்பட்டது.

ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை குறையவில்லை. கொரோனா ஊரடங்கு நேரத்தில் மிகுந்த நஷ்டம் அடைந்தோம். தற்போது இந்த மாபெரும் வெற்றியை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

Back To Top