சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம் பாலாஜி நகர் 186வது வட்டக் கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் ஜே கே மணிகண்டன் தலைமையில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் 2000 ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மடிப்பாக்கம் பாலாஜி நகரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.