Cinema Movies Entertainment Home Life & Styles News Public News

தனுஷின் திருச்சிற்றம்பலத்துக்கு போட்டியாக களமிறங்கும் மாயத்திரை

அறிமுக இயக்குநர் சம்பத் குமார் இயக்கத்தில், அசோக் குமார் நடிப்பில் உருவாகும் படம் மாயத்திரை. இவர் ‘பிடிச்சிருக்கு’, ‘முருகா’ ,’கோழி கூவுது’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அசோக்குமாருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அருணகிரி இசையமைக்கும் இந்தப்படத்தை சாய் தயாரிக்கிறார். மாயத்திரை படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மாயத்திரை படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், மாயத்திரை இது ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும். ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம். சரஸ்வதி எண்டர்பிரைசஸ் சார்பில் விநியோகஸ்தரான செந்தில் ,சேலம் கண்ணன் மாயத்திரை திரைப்படத்தை ஆகஸ்ட் 19 ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியீடுகின்றனர்.

 

மாயத்திரை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 102 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த வாரம் ரீலிசாகிறது. நடிகர் அசோக் நடித்த படங்களில் வெளிநாடுகளில் அதிக நாடுகளில் ரீலிசாகும் படமும் கூட.தமிழ்நாட்டில் ரீலிசாகும் அதே நாளில் அமெரிக்கா,நியூசிலாந்து, மலேசியா,ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் இப்படம் ரீலிசாகிறது.

Back To Top