சென்னை: ஏப்ரல் 11, 2023: உலகின் அதிக மதிப்புள்ள மற்றும் மிக வலுவான டயர் பிராண்டுகள் மீது பிராண்டு ஃபைனான்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உலகில் இரண்டாவது அதிக வலுவான டயர் பிராண்டாக இந்தியாவின் எம்ஆர்எஃப் லிமிடெட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது இம்மதிப்பீட்டிற்கான அனைத்து அளவுகோல்களிலும் உயர் மதிப்பெண்களை எம்ஆர்எஃப் பெற்றிருக்கிறது. உலகில் அதிகவேக வளர்ச்சி பெறும் டயர் பிராண்டுகள் தரவரிசையில் இரண்டாவது இடத்தையும் எம்ஆர்எஃப் கைப்பற்றியிருக்கிறது. பிராண்டு ஆற்றலில் நூற்றுக்கு 83.2 மதிப்பெண்களை எம்ஆர்எஃப் லிமிடெட் வாங்கியிருக்கிறது. இதன் அடிப்படையில் AAA பிராண்டு தரநிலையும் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அதிக மதிப்பு கொண்ட இந்திய டயர் பிராண்டிடமும் எம்ஆர்எஃப் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிலைப்புத்தன்மைக்கான கண்ணோட்ட மதிப்பில் உயர் மதிப்பெண்ணைப் பெற்றிருக்கும் எம்ஆர்எஃப், உலகளவில் முதன்மையான 10 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஒரே இந்திய டயர் உற்பத்தியாளர் என்ற பெருமையையும் பெறுகிறது.
அதிக மதிப்புமிக்க மற்றும் மிகவும் வலுவான ஆட்டோமொபைல், ஆட்டோ பாகங்கள், டயர் & மொபிலிட்டி மீதான பிராண்டு ஃபைனான்ஸ் – ன் 2023 ஆண்டறிக்கை, இந்த தொழில் பிரிவுகளுள் பிராண்டுகளின் மதிப்பை நுணுக்கமாக பகுப்பாய்வு செய்கிறது. பிராண்டு மதிப்பு என்பது, திறந்தவெளி சந்தையில் பிராண்டின் லைசென்ஸிங் வழியாக ஒரு பிராண்டு உரிமையாளர் அடையக்கூடிய நிகர பொருளாதார ஆதாயப்பலன் என புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு பிராண்டின் வலிமை, சந்தையாக்கல் முதலீடு, நிறுவன பங்காளர்களின் பங்கு, பிசினஸ் செயல்பாடு போன்ற பல்வேறு காரணிகள், அம்சங்களின் சமச்சீரான மதிப்பெண் அட்டையின் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒரு பிசினஸின் தருவாயில் என்ன அளவு பிராண்டால் பங்களிப்பு செய்யப்படுகிறது என்று தீர்மானிக்க இது பயன்படுத்தப்படுகிறது.
ஆதாரம்: brandirectory.com