முதல் கட்டமாக 60 நாளில் 4,500 பேருக்கு வழங்குகிறது
சென்னை, ஜூன் 1–
உலக அளவில் சிறந்த வருவாய் சுழற்சி மேலாண்மை, வணிக செயல்முறை சேவைகள் மற்றும் பிற சுகாதாரசேவைகளில்முன்னணி நிறுவனமாக விளங்கிவரும் ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதன் ஒரு பகுதியாக அடுத்த ஓராண்டில் 18 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 2 மாதத்தில் 4,500 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந் நிறுவனம் இதன் செயல் பாடுகளை பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் முழுவதும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து உள்ளது. கடந்த 2020–ம் ஆண்டில் 18 ஆயிரமாக இருந்த இதன் பணியாளர்கள் எண்ணிக்கை தற்போது 2022–ம் ஆண்டில் 26 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் இந்நிறுவனம் டொமைன் நிபுணத்துவத்திலும் அதிக கவனம் செலுத்தி புதிய தீர்வுகளை வழங்கிவருகிறது. இந்தியா முழுவதும் உள்ள பெரிய நகரங்களில் மட்டும் வேலை வாய்ப்புகளை வழங்காமல் சிறு நகரங்களில் உள்ள திறமையானவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்குவதை இந்நிறுவனம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், இந்த நிறுவனம் எந்த வொரு துறையிலும் குறைந்தபட்ச பணி அனுபவம் உள்ள பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. இவர்களில் 18 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த 12 மாதங்களில் அவர்களுக்கு வேலை வழங்கப்படஉள்ளது.இவர்களில் இருந்து போட்டித்திறன் மிக்க மற்றும் தகவல் தொடர்பு திறன் சார்ந்த நிபுணர்களை கண்டறிந்து அவர்களை பணியமர்த்த இந்நிறுவனம் திட்ட மிட்டு உள்ளது.
இந்த புதிய வேலை வாய்ப்புகள் குறித்து ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தின் மனிதவளமேம்பாட்டு பிரிவு துணைத்தலைவர் நிதின்பரேகெரே கூறுகையில், ஏராளமான புதிய வாடிக்கையாளர்களுடன் சமீப காலமாக எங்கள் வர்த்தகம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த ஆண்டு இந்தியாவில் எங்கள் விரிவாக்கத் திட்டங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த 2020–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 23.52 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் இந்த ஆண்டு 6.57 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், பெங்களூர், ஐதராபாத், சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல் நவிமும்பை, புனே, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட சிறுநகரங்களில் உள்ள புதிய திறமையாளர்களுக்கும் நாங்கள் வேலை வாய்ப்பை வழங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
கோல்ட்மேன்சாக்ஸ் அசெட்மேனேஜ் மென்ட் மற்றும் எவர்ஸ்டோன் குழுமத்தில் ஒன்றான ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது 26 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களைக்கொண்டுள்ளது. இந்தியாவில் அதன் பணியாளர்களை மேலும் அதிகரிப்பதன் மூலம்‘ மெடிக்கல் பில்லிங்’ திட்டத்தில் தீவிர கவனம் செலுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தில் சேரவிண்ணப்பிக்கவேண்டிய இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் வருமாறு:–
https://www.omegahms.com/jobs/other-opportunities/மற்றும்
careers.chennai@omegahms.com, careers.trichy@omegahms.com, Careers.Bangalore@omegahms.com