
கொடைகானல்: நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் மற்றும் நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில் கொடைகானல், பூம்பாறை கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா இதன் நிறுவனர் முனைவர் என். பாலசரவணன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது.
இந்நிகழ்வில்கொடைகானல் காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி மற்றும் பூம்பாறை வனத்துறை அதிகாரி காளிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
சமூக ஒற்றுமையை வளர்க்கவும், தேவையுள்ள குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் நலத்திட்ட உதவிகளாக மூத்த மற்றும் ஒற்றைத் தலைமை பெண்களுக்கு சேலைகளும் ஆண்களுக்கு வேட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள், ஒற்றைத் தலைமை பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவிற்கு அழகு சேர்க்கும் வகையில் பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய தானத்தார்களுக்கும், தன்னார்வலர்களுக்கு முனைவர் பாலசரவணன் அவர்கள் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் சமூக சேவையில் நம் பாரத சேவை அமைப்பு தொடர்ச்சியாக மக்களுக்காக செயல் ஆற்றிக் கொண்டிருக்கும் பொறுப்புணர்வு பற்றியும் விளக்கி பேசினார்
மேலும் நம் பாரத சேவை அமைப்பானது கடந்த
2012-ல் தொடங்கப்பட்டு தமிழகமெங்கும் 18 உலக சாதனைகள் நிகழ்த்திய சமூக சேவை அமைப்பாக திகழ்கிறது. 250-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 10,000 தன்னார்வலர்கள் மற்றும் 1,00,000 உறுப்பினர்கள் இணைந்து செயல்படும் இவ்வமைப்பு, பல்வேறு திட்டங்களின் மூலம் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருவதாகவும்
இந்த சமத்துவ பொங்கல் விழா சமூக சேவையின் மேன்மையையும், அனைவருக்கும் இணக்கமான வாழ்க்கையை உருவாக்கும் நம் பாரத சேவை அமைப்பின் பங்களிப்பையும் காட்டுகிறது என பெருமையுடன்தெரிவித்துக் கொண்டார்.