Home Life & Styles News Public News

வில்லேஜ் டிக்கெட் 2023: மாபெரும் கிராமத் திருவிழா மே 5-ம் தேதியன்று ஆரம்பம்

சென்னை: மே 1, 2023: சென்னை மாநகரின் மிகப்பெரிய கிராமத் திருவிழாவான வில்லேஜ் டிக்கெட், பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) அமைந்துள்ள சத்தியபாமா பல்கலைக்கழக வளாக மைதானத்தில் 2023 மே 5 முதல், மே 7-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. பிராண்டு அவதார் நான்காவது பதிப்பாக வழங்கும் வில்லேஜ் டிக்கெட் கிராமத் திருவிழா, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களின் கலாச்சாரத்தையும் பல்வேறு கலை வடிவங்களையும், தனித்துவமான உணவுத்தயாரிப்பு முறைகளையும், உணவுகளையும் மற்றும் உணர்வுகளையும் உயிரோட்டத்துடன் சென்னைவாழ் மக்களுக்காக வழங்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் உருவாகி இன்று நாடெங்கும் புகழ்பெற்றிருக்கும் மசாலா பிராண்டான சக்தி மசாலா நிறுவனம் இந்த ஆண்டு நிகழ்விற்கான டைட்டில் ஸ்பான்சராக இணைந்திருப்பதால், சக்தி மசாலா’ஸ் வில்லேஜ் டிக்கெட் என்ற பெயரில் நடைபெறுகிறது.

 

கிராமப்புற வாழ்க்கையில் சுவாரஸ்யமான விஷயங்களுக்கு பஞ்சமேயில்லை. தமிழ்நாட்டின் கிராமங்களில் காலம் காலமாக பராமரிக்கப்பட்டு வரும் ஆரோக்கியமான உணவு கலாச்சாரம், நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாடெங்கும் பரவலாக விளையாடப்பட்ட, தமிழ் மண்ணுக்கே உரிய விளையாட்டுகள், பழங்கால கிராமப்புற வீடுகள், பொட்டி – கடை, பஞ்சாயத்து அமைப்பு முறை, மைய மேடை மற்றும் வியப்பூட்டும் அற்புதமான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கிராமப்புற வாழ்க்கையோடு இணைந்திருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் நகர்ப்புற மக்களுக்கு நினைவூட்டி, அறிமுகப்படுத்தி அதற்கு புத்துயிர் அளிப்பதே வில்லேஜ் டிக்கெட் நிகழ்வின் நோக்கமாகும். தமிழ்நாட்டின் கிராமங்களின் வாழ்க்கை, கலை மற்றும் கலாச்சாரத்தை சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் அனுபவித்து உணரவும், ரசித்து மகிழவும் ஒரு தனிச்சிறப்பான வாய்ப்பை வில்லேஜ் டிக்கெட் வழங்குகிறது.

 

பிராண்டு அவதார் – ன் தலைமை செயல் அலுவலர் திரு. ஹேமச்சந்திரன் இது பற்றி கூறியதாவது: “வில்லேஜ் டிக்கெட் நிகழ்வு இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்டபோது கிடைத்த அற்புதமான வரவேற்பு எங்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே கூறவேண்டும். இந்நிகழ்விற்கு 60,000-க்கும் அதிகமான நபர்கள் வருகை தந்தனர். சென்னைவாழ் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று உடனடியாகவே பிரபலமான நிகழ்வு இது. சென்னை மக்களுக்கு மீண்டும் ஒருமுறை இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். முந்தைய பதிப்புகளைவிட இன்னும் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களையும், ரசித்து மகிழ்வதற்கான பல்வேறு விருப்பத்தேர்வுகளையும் மிகப்பெரிய அளவில் உள்ளடக்கியதாக இந்த ஆண்டு நடைபெறும் 4வது பதிப்பு நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த நபர்களும் அனுபவிப்பதற்கும், மகிழ்வதற்கும் இந்நிகழ்வின் பல அம்சங்கள் நிச்சயமாக இடம்பெறுகின்றன. நகரில் இருந்துகொண்டே கிராம வாழ்க்கையை அனுபவப்பூர்வமாக நேரில் கண்டுணரவும், நமது கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அறிந்து மகிழவும் உதவும் ஒரு அற்புதமான நிகழ்விற்கு இந்த கோடை விடுமுறை நாட்களில் சென்னைவாழ் மக்கள் பெரும் திரளாக, குடும்பத்தினர் அனைவரோடும் இணைந்து வருகை தருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

 

வில்லேஜ் டிக்கெட் 2023 நிகழ்வின் சிறப்பம்சங்கள்:

⮚ கலை அரங்கம் – நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல், ஃப்ரீஸ்டைல் நடனம், மிமிக்ரி (பலகுரல்) நிகழ்ச்சி மற்றும் கலாச்சார பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்கும் கலாச்சார போட்டி.

⮚ பாரம்பரிய உணவு – தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரியமான உணவுகளை நேரடியாக சமைத்து வழங்கும் 33 உணவகங்கள்.

⮚ உழவு அனுபவம்

⮚ 2023 மே 5 அன்று “மகிழ்ச்சியான வாழ்வு திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா” என்ற தலைப்பில் பட்டிமன்றம் – ராஜ்மோகன் மற்றும் குழுவினர் பங்கேற்பு

⮚ 2023 மே 5 அன்று கரகாட்டம் எதிர் மயிலாட்டம் – நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கருவிகளுடன்

⮚ MD இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி & மாற்றுத்திறனாளி டிரம்மரின் சிறப்பான டிரம் தாள இசை – 2023 மே 6 அன்று

⮚ 2023 மே அன்று RK ஆதித்யா & DJ கௌதம் வழங்கும் நிகழ்ச்சி

 

சென்னைவாழ் மக்களுக்கு கிராம வாழ்க்கை கருத்தாக்கத்தை கொண்ட அனுபவத்தை வழங்கும் முதன்முதல் முயற்சி இது; தமிழ்நாட்டின் கிராமங்களில் இன்னும் உயிரோடு இருக்கும் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வில்லேஜ் டிக்கெட் நகர்ப்புற மக்களுக்கு வழங்குகிறது. பிராண்டு அவதார் வழங்கும் இத்திருவிழாவான வில்லேஜ் டிக்கெட் 2023, நான்காவது பதிப்பாக இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற மூன்று பதிப்புகளும் 60,000-க்கும் அதிகமான மக்களை இந்நிகழ்விடத்திற்கு வருகை தர வரவழைத்திருக்கும் பெருமை இந்நிகழ்விற்கு இருக்கிறது. குழந்தைகள், இளையதலைமுறையினர் மட்டுமின்றி, மூத்த குடிமக்களும் குடும்பத்தோடு ஒருங்கிணைந்து, ஆனந்தமாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடி மகிழக்கூடிய நிகழ்ச்சி என இது புகழ்பெற்றிருக்கிறது. நமது சிறப்பான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொடர்ந்து பாதுகாக்க உதவுகின்ற கிராம வாழ்க்கையின் மூன்று தூண்களை கௌரவிப்பதற்கான ஒரு முன்னெடுப்பாக வில்லேஜ் டிக்கெட் நடத்தப்படுகிறது. நவீனத்துவத்தின் தாக்குதலை எதிர்த்து, சமாளித்து நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கிராம வாழ்க்கைமுறையே. பாரம்பரிய வேளாண்மை வழிமுறைகளின் மூலம் நேர்மறை தாக்கத்தை உருவாக்கியிருக்கும் விவசாயிகள்; தங்களது கிராமத்தில் பாரம்பரிய கைவினைத்திறனையும், கலையையும் அழிந்துவிடாமல் தக்கவைத்து தொடர்ந்து பாதுகாத்து வரும் கலைஞர்கள் மற்றும் கைவினைத்திறன் படைப்பாளிகள்; கிராமப்புற உணவின் உண்மையான சுவையையும், மசாலா கலவை முறைகளையும் பல தலைமுறைகளாக பேணி பாதுகாத்து வரும் பாரம்பரியமான கிராம சமையல் கலைஞர்கள். கிராம வாழ்க்கையின் கட்டமைப்பை பாதுகாத்து வரும் இந்த மூன்று தூண்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியாக வில்லேஜ் டிக்கெட் இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

********

உழவு, உணவு, உணர்வு ஆகியவற்றின் சங்கமம்: வில்லேஜ் டிக்கெட்

 

நாம வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை, நாம சாப்பிட்ட பாரம்பரிய சாப்பாடு, நாம விளையாண்ட விளையாட்டு, நாம பார்த்து இரசிச்ச தமிழ் கலை மற்றும் கலாச்சாரங்கள்… இது எல்லாமே நம்ப வில்லேஜ் டிக்கெட்ல … சென்னை ஓஎம்ஆர் சத்யபாமா மைதானத்தில ஒரு கிராமத்து திருவிழா… உழவர் உணவு உணர்வு இந்த மூன்று விஷயங்களும் சேர்ந்தது தாங்க வில்லேஜ் டிக்கெட்.

 

உழவர்

உழவன் சேத்துல கால் வைக்க முடியலனா நம்ப யாருமே சோத்துல கை வைக்க முடியாதுனு சொல்லுவாங்க… அவங்களோட உழைப்பு எல்லாருக்குமே தெரியணும் அப்படின்றதுக்காக நம்ப ஓஎம்ஆர் சத்யபாமா மைதானத்தில ஒரு ஏக்கர் நிலத்துல, இயற்கை வழி விவசாயம் செய்ய போறோம். போர் அடிச்சு நெல் குத்தி உழவர்களோட சேர்ந்து நாமும் உழவு பழக போறோம்.

 

அடுத்ததா உணவு

ஒவ்வொரு ஊர்லயும் அதுக்கான பெருமையான, சத்தான, சுவையான உணவு இருக்கு. தமிழ்நாட்டுல இருக்கிற 32 மாவட்டங்கள்ல இருந்து, 300-க்கும் மேற்பட்ட சமையல் வல்லுநர்களை கூட்டிட்டு வந்து சுவையான கறி விருந்து; கல்யாண விருந்து; அப்பறம் 48 வகையான கிராமத்து விருந்து! நம்ம சென்னை மக்களுக்கு கொடுக்க போறோம்.

 

அது என்னங்க விருந்து?

சொல்றேன் கேளுங்க. தலை வாழை இலை முழுக்க 32 வகையான அசைவ உணவை பரிமாறப் போறோம்! அதே மாதிரி கல்யாண விருந்துல 32 வகையான சைவ உணவை நம்ம மக்களுக்கு கொடுக்க போறோம். கிராமத்து விருந்துல 48 வகையான உணவு பஃபே முறையில மதிய விருந்தா கொடுக்கப் போறோம். நமக்கு பெயரே தெரியாத பல ஊரு சாப்பாடு நம்மள தேடி நம்ம சென்னை ஓஎம்ஆர்-க்கு வர போகுது.

 

உணர்வு

நம்ம கிராமத்து பாரம்பரியத்த தெரிஞ்சுக்கணும், காப்பத்தணுங்கிற உணர்வு எல்லாருக்குள்ளையும் இருக்கும். அது எப்படி நம்ம பாரம்பரியத்தையும், உணர்வையும் விட்டுக் கொடுக்க முடியும்? அத நீங்க கண்ணால பார்த்து இரசிச்சு தெரிஞ்சிக்கணும்னு சொல்லித் தாங்க 20க்கும் மேலான பாரம்பரிய கலைஞர்களுடைய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், களியாட்டம், கரகாட்டம் போன்ற பல கலைகள நம்ம வில்லேஜ் டிக்கெட்-ல கொண்டுவந்திருக்கோம். அது மட்டும் இல்லாம நம்ம குழந்தைகளுக்கு தெரியாம போய்ட்டு இருக்கிற கில்லி, பம்பரம், உரியடி, கபடி எல்லாமும் கூட அங்க இருக்க போகுது. குடும்பத்தோட நம்ம கிராமத்து உணர்வை இங்கே அனுபவிக்கலாம்.

 

நுழைவு அனுமதிச்சீட்டு:

1. நுழைவுச்சீட்டின் விலை ரூ.200+ ஜிஎஸ்டி வரி மற்றும் பணம் செலுத்தலுக்கான கேட்வே கட்டணம்

2. 8 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை.

 

உங்களது நுழைவுச் சீட்டுகளை இதில் முன்பதிவு செய்து பெறலாம்: https://buyticket.villageticket.com/ticketBookings/OneDayEntryPass

 

நிகழ்ச்சி நடைபெறும் நேரங்கள்

1. கலை அரங்கம் – காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை

2. உணவு – காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை

3. கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் வேறுபிற அனுபவங்கள் மற்றும் செயல் நடவடிக்கைகள் காலை 11:00 முதல், இரவு 9:00 மணி வரை

 

அதிக தகவலுக்கு, காணவும்: https://villageticket.com/

Back To Top