Food Health & Medical Home Life & Styles News Public News

சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம்விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA)

இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூகமுன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின்புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தரவுகள், அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் எனபலவற்றை பரிசீலனை செய்து, விவாதிக்கும் வகையில்மாநாடு ஒன்று ‘வெமா’(WEMAAA) எனும் பெயரில்சென்னையில் நடைபெற்றது.

இந்தியாவில் இயங்கும் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியாமட்டுமல்லாமல் பல சர்வதேச நாடுகளில் இருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட பன்னாட்டு பெரு நிறுவனங்கள், முந்நூறுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள், நூற்றுக்கும் மேற்பட்ட அரசாங்க உயர் அதிகாரிகள் உள்ளிட்டபல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

 

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பான பல்வேறு கருத்துருக்கள், சமூக அறிவியல் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின்கூற்றுப்படி அடுத்து வரும் 15 முதல் 20 ஆண்டுகாலம், புவியின்இயல்பு நிலைக்கு சவாலான காலம் என ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு நம்முடைய அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமான. சுகாதாரமான சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமடைதலின்சமநிலை தொடர்பாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன் அகஸ்திய முனிவர் அருளிச்சென்ற விசயங்களை, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றவாறு எளிதாக நடைமுறைப்படுத்துவது குறித்த விவாதம், பல்வேறு கோணங்களில் நடைபெற்றது.

Back To Top