~ சந்து மொண்டேட்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்தெலுங்கு திரைப்படம் அக்டோபர்-5, 2022 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும்~
சென்னை: உள்நாட்டு நிறுவனமான, இந்தியாவின் மிகப்பெரிய, வீடியோ ஆன் டிமாண்ட் ஸ்ட்ரீமிங் தளமான ZEE-5, தெலுங்கு மொழி வெற்றித் திரைப்படமான ‘கார்த்திகேயா – 2’ இன் உலகளாவிய டிஜிட்டல் பிரிமியரை இன்று அறிவித்தது. சந்து மொண்டேட்டி எழுதி இயக்கிய, சாகசமும் மர்மங்களும் நிறைந்த இப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹர்ஷா செமுடு, ஆதித்யா மேனன், சீனிவாச ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் மற்றும் பழம்பெரும் நடிகர் – அனுபம் கெர் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார். கார்த்திகேயா – 2′ அக்டோபர் 5 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் இத்தளத்தில் திரையிடப்படுகிறது.
பெறும் வரவேற்பு பெற்ற முதல் பாகத்தைத் தொடர்ந்து வெளிவந்த தொடர் பாகமும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வரவேற்பைப் பெற்று 120 கோடிக்கும் மேலான வசூலுடன் பிளாக்பஸ்டர் திறப்படமாக்ஹா உருவெடுத்தது. இந்து மத புராணங்களை சிறப்பித்துக் காட்டும் இந்த மர்மத் திரில்லரானது, கோவர்தன் கிரி, துவாரகாவின் தெருக்கள், புந்தேல்கண்ட் பாலைவனம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆறுகள் என இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் அண்ட் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள கார்த்திகேயா – 2’ திரைப்படம், கதாநாயகன் கார்த்திகேயா உண்மையைத் தேடிச் செல்வதைப் படம் பிடித்துக்காட்டுகிறது. பண்டைய இந்திய நம்பிக்கை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் தத்துவத்தின் சக்தியைக் கண்டறிய இது அவரை வழிநடத்துகிறது.
கார்த்திக் கட்டம்நேனியின் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் கால பைரவாவின் இசையுடன், கார்த்திகேயா 2 இன் திரைக்கதை சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் 3 மொழிகளில் திரையிடப்படும் இப்படம் 190+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள பார்வையாளர்களை கவரும். இந்த அற்புதமான சாகசத் த்ரில்லரின் முதல் காட்சியை அக்டோபர் 5, 2022 அன்றே காணத் தயாராகுங்கள்.
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி திரு. மணீஷ் கல்ரா கூறுகையில், “தெலுங்கு திரையுலகில் வசூல் சாதனை படைத்த ‘கார்த்திகேயா 2’ஐ எங்கள் தளத்தில் வழங்குவது எங்களுக்குப் பெருமை சேர்க்கிறது. அற்புதமான நடிப்பு, சிறந்த அனிமேஷன் ஆகியவற்றுடன் வியக்க வைக்கும் கதைக்களத்துடன் வரும் இத்திரைப்படம் புராணங்கள் மற்றும் நவீன அறிவியலின் கலவையாகும். ZEE5 இல், சிறந்த உள்ளடக்கத்தை வெளியிடுவதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம் மற்றும் கார்த்திகேயா 2 அதை பிரதிபலிப்பதாக உள்ளது. தெலுங்கு திரைப்படத்துறை எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும், மேலும் இந்த சந்தையில் எங்கள் இருப்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் மற்றும் இது போன்ற தரமான உள்ளடக்கத்துடன் இப்பிரிவை தொடர்ந்து மேம்படுத்துவோம்.” என்றார்.
படத்தைப் பற்றி கருத்து தெரிவித்த நிகில் சித்தார்த்தா, “கார்த்திகேயா 2 போன்ற மாபெரும் தொடரின் பகுதியாக இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. திரைப்படம் நவீன அறிவியல் மற்றும் புராணங்களின் சரியான கலவையைக் கொண்டுள்ளது. கதை மிகவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது மற்றும் பார்வையாளர்கள் அதை உணர்வார்கள் எனக் கருதுகிறேன். 190+ நாடுகளுக்கு சேவை செய்யும் ZEE5 போன்ற தளத்தில் வெளியிடப்பட்டால் மட்டுமே அனைவரிடமும் இக்கதையை எடுத்துச் செல்வது சாத்தியமாகும். கார்த்திகேயா 2 இன் செழுமையையும் காவியத்தையும் பார்வையாளர்கள் அனுபவிப்பதை எதிர்நோக்குகிறேன்” என்றார்.
அனுபமா பரமேஸ்வரன் மேலும் கூறுகையில், “”முக்தாவின் கக்தாபத்திரத்தில் நடிப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது, ஒரு இரகசியச் சமூகத்தின் உறுப்பினர்களாக துப்புகளைக் கண்டறிந்து மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணர முயல்வது என்பது முற்காலத்துடன் இணைவதை வெளிப்படுத்துகிறது. எனக்கு வரலாறு மிகவும் பிடிக்கும். குறியீடுகள், சின்னங்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பழங்கால அகழ்வாராய்ச்சிகள் மற்றும் பல குறித்து நான் விரும்பிப் படிப்பதுண்டு. கார்த்திகேயா- 2 படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. OTT வெளியீட்டின் மூலம், இந்த வசீகரிக்கும் கதை பலரைச் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.
“பாக்ஸ் ஆபிஸில் கிடைத்த பெரும் வெற்றிக என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, நான் எப்போதும் இந்திய புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்டேன். ஆனால், இந்தப் படத்தின் மூலம் அதிகபட்ச பார்வையாளர்களுக்கு, நமது இந்திய புராணங்கள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். ZEE5-இல் 3 மொழிகளில் திரையிடப்படுவதால், நாங்கள் அதை தேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறோம், OTT வெளியீடு மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றியை வழங்கும் என்று நான் நம்புகிறேன்” என இயக்குனர் – சந்து மொண்டேட்டி கூறினார்.
ZEE5 இல் ‘கார்த்திகேயா 2’ ஸ்ட்ரீமிங்கை விரைவில் காணத் தயாராகுங்கள்!
ZEE5 குறித்து:
ZEE5 இந்தியாவின் சமீபத்திய மற்றும் நவீன OTT தளம் ஆகும் மற்றும் மில்லியன்கணக்கான பார்வையார்களுக்கு பல மொழிகளில் கதைகளை எடுத்துரைக்கும் தளமாகும். Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவான ZEE5, வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் நுகர்வோரை முற்றிலும் கருத்தில் கொண்ட தளமாகும். 3,500 படங்களுக்கு மேல் விரிவான மற்றும் மாறுபட்ட உள்ளடக்க நூலகத்தை இது வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 அசல் மற்றும் 5 லட்சம் மணிநேரம் ஆன் டிமாண்ட் உள்ளடக்கம். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த அசல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை இதில் காணலாம். Edtech, Cineplays, News, Live TV மற்றும் Health & Lifestyle ஆகியவையும் இதில் வழங்கப்படுகிறது உலகளாவிய தொழில்நுட்ப வல்லுனர்களின் கூட்டில் உருவான ஒரு வலுவான ஆழமான தொழில்நுட்ப அடுக்கு, பலவகை சாதனங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இயக்க முறைமைகள் மூலம் 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காணும்அனுபவத்தை ZEE5 ஐ செயல்படுத்தியுள்ளது.
ZEE5-ஐ இங்கு பின்தொடர்க:
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/