Government News Home Life & Styles News Police News Public News

போராடி பெற்ற வாக்குரிமையை அனைவரும் சரியாக பயன்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான டாக்டர் ப தனசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் 2024 ஆம் ஆண்டின் 18 வது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 96.88 கோடி பேர் எனவும், உலகளவில் நடக்கும் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாக இந்திய மக்களவைத் தேர்தல் உள்ளது என கூறினார். ஆனால் இந்தியா இன்னும் 100% வாக்குப்பதிவுக்காக போராடி வருகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசியல் என்பது நம் மக்கள் பலருக்கும் புரியாத ஒன்றாக இருந்தாலும் நம் நாட்டில் வறுமையை ஒழிக்க, அனைவருக்கும் சமமான கல்வி உரிமை, மூதியோருக்கான திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் இலவசம் மருத்துவம், பெண்கள் முன்னேற்றத்திற்கான மேம்பாட்டு திட்டங்கள், விவசாயம் மற்றும் நகர்புற வளர்ச்சியில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம், என்பதை நம்மால் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.

தற்போது இருக்கும் இந்த நிலையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்கும் கடமை நமக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை மாற்ற நமது வாக்கு ஒன்றே நமது ஆயுதம் என கூறிய தனசேகர் அவர்கள் வாக்களிப்பதில் வாக்கு உரிமை உள்ள அனைவரும் அவர்களது பங்களிப்பை எந்தவித நிபந்தனையும் இன்றி செலுத்த வேண்டும் எனவும் வாக்களித்தவர்கள் மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Back To Top